ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாஎல நகரில் அமைந்துள்ள வாகன விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் சந்தேக நபரினால் திருடப்பட்டுள்ளது. சந்தேக நபர் குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்து மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி அங்குள்ள சீசீடீவியில் பதிவாகியுள்ளது.
இந்த நபர் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் களனி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி – 0718591589 உதவி பொலிஸ் அத்தியட்சகர் – 0718591602 ஜாஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – – 0718591603