வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல்!

வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் இருவர் காயமடைந்துள்ளதுடன், குறித்த வீடும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்றையதினம் இரவு வவுனியா மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இத்தாக்குதலில் இருவர் காயமடைந்ததுடன் வீட்டின் பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த குழுவும் தப்பிச் சென்றுள்ளது. மேலும், குறித்த தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவர்கள் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleயாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது – 59 வயதான நபர் ஒருவர்
Next articleவவுனியா நகரில் நீதி கோரி ஸ்ரீநகர் மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்!