உறங்கிக் கொண்டிருந்த மூத்த சகோதரியை கொடூரமாக கொலை செய்த சகோதரன் – இலங்கையில் சம்பவம்

நுரைச்சோலை – ஆலங்குடா பிரதேசத்தில் தனது மூத்த சகோதரியை கொலை செய்த சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது, குறித்த சம்பவத்தில் விசேட தேவையுடையவரான 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18 ஆம் திகதி வீட்டிற்கு தாமதமாக வந்த சந்தேக நபரை அவரது தாய் கடுமையாக கண்டித்ததாக சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த அவர் உறங்கிக் கொண்டிருந்த சகோதரியை பொல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவருகிறது.

தப்பியோடிய சந்தேகநபரை பிரதேசவாசிகள் பிடித்து நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிலநாட்கள் முன்பு காணாமல் போயிருந்த 2 வயது குழந்தை மீண்டது!
Next articleதிருமதி உலக அழகி 10 இலட்சம் சரீர பிணையில் விடுதலை!