திருமதி உலக அழகி 10 இலட்சம் சரீர பிணையில் விடுதலை!

திருமதி உலக அழகியான கரோலின் ஜுரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை முன்னிலையான நிலையிலேயே, இருவரும் 10 இலட்சம் ரூபா சரீர பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 05ம் திகதி இடம்பெற்ற உலக அழகி போட்டியில் இடம்பெற்ற சர்ச்சையை தொடர்ந்து, மூன்று குற்றச்சாட்டுகளின் படி கறுவாத்தோட்டம் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருமதி உலக அழகியான கரோலின் ஜுரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் இன்றைய தினம், திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மொடல் சூலா பத்மேந்திர ஆகியோர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleஉறங்கிக் கொண்டிருந்த மூத்த சகோதரியை கொடூரமாக கொலை செய்த சகோதரன் – இலங்கையில் சம்பவம்
Next articleஇலங்கையில் வாகனவிபத்துக்களால் 620 பேர் பலி!