சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன!

இறைவன் வழிபாட்டில், சங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சங்குகளால் செய்யப்படும் அபிஷேகம் சிறப்பு மிக்கது. இதை தரிசிப்பது பெரும் பலனை அளிக்கும். ஹிந்துக்களின் கலாசாரத்தில் சங்கு ஊதுதல் மிகவும் முக்கியமானது.

சங்கு வீட்டில் இருந்தால் ஒரு நல்ல சூழல் ஏற்படும். கடலில் இருந்து கிடைக்கும் சங்கு அதில் அனைத்து புனித தேவதைகளும் இருப்பதாக குறிப்பிடுகிறது.

அற்புத வெண்ணிற சங்கை நன்கு கழுவி எடுத்து அதில் மஞ்சள், குங்குமம் இட்டு அதை ஒரு வெள்ளி பாத்திரத்தில் அரிசி போட்டு அதன் மேல் அடங்குமாறு வைக்க வேண்டும். மேலும், அமாவாசை, பௌர்ணமி அன்று சங்கில் தண்ணீர் அல்லது பால் ஊற்றி வழிபடுவது நல்லது.

சங்கு பெரும்பாலும் கடல் பகுதியில் உள்ள கோவில்களில் கிடைக்கும். அது மிக பெரியதாக இருக்க கூடாது கைக்குள் அடங்கும் அளவு வாங்கி வீட்டில் வைத்தாலே போதும். எனவே, சங்கு வீட்டில் இல்லாதவர்கள் அதை வைத்து வழிபட்டால் நல்லது.

Previous articleஉலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி
Next articleகனடாவில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம்!