முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கானவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்தவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி நீராவிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான முகமட் றஜாஜ் (வயது 39) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலினின்றி அவர நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

குறித்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Previous articleவடமாகாணம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகவே உள்ளது!
Next articleநடிகை சமீரா ரெட்டிக்கும் கொரோனா!