மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பொது மக்கள்!

மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது மின் கம்பம் ஒன்றை நாட்டுவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்திலே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கண்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தை நிறுவுவது தொடர்பான தகராறு காரணமாக இலங்கை மின்சார சபையுடன் இணைக்கப்பட்ட பணியாளர்கள் கிராமவாசிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சரியான தரமின்றி மின் கம்பங்களை நிறுவியுள்ளதாக கிராமவாசிகளால் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் இது குறித்த விவாதத்தின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை – பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
Next articleஇன்றைய ராசிபலன் – 20.04.2021