பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி வெடிகுண்டு வதந்தி பரப்பிய பெண்ணொருவருக்கு நேர்ந்த கெதி!

தங்கொட்டுவ பொலிஸ் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 119 பொலிஸ் அவசர எண்ணுக்கு தெரிவித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

18 ஆம் திகதி பிற்பகல் 2.45 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு, வாகனத்தில் வெடிமருந்து ஏற்றிய குழு, தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தை தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார், தங்கொட்டுவ, மொஹட்டுமுல்ல பகுதியை சேர்ந்த யுவதியின் தொலைபேசியில் இருந்து போலி தகவல் வழங்கப்பட்தை கண்டறிந்தனர்.

அந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த யுவதியின் கையடக்க தொலைபேசியில் இருந்து அவரது தங்கையான 25 வயதான யுவதியே இந்த விபரீத செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

இரண்டு யுவதிகளையும் பொலிசார் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். கைதான மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார். போலி தகவல் வழங்கிய 25 வயதான யுவதியை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleகூட்டமைப்பு முக்கியஸ்தர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்த சம்பவம்!
Next articleஇலங்கையில் வங்கி ஊழியர்கள் 55 பேருக்கு கொரோனா!