இலங்கையில் வங்கி ஊழியர்கள் 55 பேருக்கு கொரோனா!

கொழும்பின் பல பகுதிகளிலுள்ள அரச வங்கிகளில் பயணியாற்றும் 55 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கொழும்பு கோட்டை. நாரம்மல, கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அரச வங்கி அதிகாரிகள் 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, கட்டுபொத்த மற்றும் நாரம்மல அரச வங்கிகள் இரண்டில் பணியாற்றும் 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக நேற்று 2 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை இலங்கை வங்கியின் பிரதான வங்கி கிளை ஊழியர்கள் மூவரும் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Previous articleபொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி வெடிகுண்டு வதந்தி பரப்பிய பெண்ணொருவருக்கு நேர்ந்த கெதி!
Next articleஇதுவரையில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!