தன்னை திருமணம் செய்து கொள்ளாத காதலியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த காதலன்!

தமிழகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளாத காதலியை நண்பர்களுடன் காதலன் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்தில் வசித்து வருவபர் சரஸ்வதி(18). இவர் நர்ஸிங் படித்துக்கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் இவர் கடந்த 2ம் திகதி காலையில் கழிவறை வாசலில் சடலமாக கிடந்துள்ளதையடுத்து, பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து இறுக்கி கொலை செய்துள்ளது அம்பலமாகியதையடுத்து, பொலிசாரின் விசாரணையில் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளது.

சரஸ்வதியின் காதலர் ரங்கசாமி(21). சரஸ்வதி இறந்ததும் இவர் எஸ்கேப் ஆகியுள்ள நிலையில் அவரைத் தேடி கண்டுபிடித்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ரங்கசாமியும், சரஸ்வதியும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ள நிலையில், இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததால் இரு வீட்டினரும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் சரஸ்வதிக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்படவே, காதலி தனது பெற்றோரின் பேச்சை மீற முடியாது என்று கூறியுள்ளார். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ரங்கசாமி வீட்டின் பின்புறம் முட்புதரில் மறைந்து இருந்துள்ளார்.

அத்தருணத்தில் கழிவறைக்கு சென்ற சரஸ்வதியிடம் தகராறு செய்ததோடு, இறுதியில் அவரை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

ரங்கசாமியுடன் அவரது நண்பர் ரவீந்தர் மற்றும் 17 வயது சிறுவனும் துணைக்கு வந்துள்ள நிலையில், தற்போது மூன்று பேரையும் கைதுசெய்த பொலிசார், சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Previous articleபண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்!
Next articleஇம்முறை மேதின ஊர்வலங்கள் இல்லை!