இணையம், சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்புபவர்களிற்கெதிரான நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இணையத்தளங்கள் ஊடாக பகிரப்படும் போலியான மற்றும் மக்களை திசைதிருப்பும் வகையிலான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கையெடுப்பதற்கான சட்ட வரைபை தயாரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று (20) தெரிவித்தார்.

போலி செய்திகளை எதிர்கொள்வதற்கு பல ஜனநாயக நாடுகள் நடவடிக்கை எடுக்த்துள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பான சட்டமூலம் உருவாக்கும் பணி சட்ட வரைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று ரம்புக்வெல கூறினார்.

Previous articleஇம்முறை மேதின ஊர்வலங்கள் இல்லை!
Next articleமன்னாரில் வீட்டில் இருந்த மதுபானத்தை மனைவி மகள் குடிப்போமென மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கணவன்!