யாழ் பருத்தித்துறைய வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் ஒருவர் பலியானதுடன் 4 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleமன்னாரில் வீட்டில் இருந்த மதுபானத்தை மனைவி மகள் குடிப்போமென மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கணவன்!
Next articleபுதிய பெட்டிகளை இணைத்தக் கொண்டு யாழ் வந்தது ஸ்ரீ தேவி புகைரதம்!