புதிய பெட்டிகளை இணைத்தக் கொண்டு யாழ் வந்தது ஸ்ரீ தேவி புகைரதம்!

கொழும்பு – காங்கேசன்துறை இடையில் ஸ்ரீதேவி புகைரத சேவையில் புதிய ரயில் பெட்டிகளை இணைத்து நேற்றய தினம் 1வது சேவையை ஆரம்பித்துள்ளது.

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன.

Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2 ஆம் 3 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 03.55க்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறை 22.29 இற்கு வந்து இன்று காலை அதே ரயில் காங்கேசன்துறையில் இருந்து 03.30 க்கு புறப்பட்டு

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 04.00 வந்து கோட்டைக்கு புறப்பட்டது.

Previous articleயாழ் பருத்தித்துறைய வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் ஒருவர் பலியானதுடன் 4 பேர் படுகாயம்!
Next articleபூநகரி பள்ளிக்குடா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!