வடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்வதை உடன் நிறுத்த வேண்டும்!

வடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்வதை உடன் நிறுத்த வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாக முன்னரே, மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எனவும், இதனை சமாளிப்பதற்காக, வடபகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்றனர்.

புலிகள் மீள உருவாவது கட்டுப்படுத்துகின்றது, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர் என சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே, இந்த செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அவர்களுடைய உரிமை, அந்த எதிர்ப்புக்காக அவர்கள் கூறிய காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முன்வர வேண்டும்.

அதை விடுத்து, வடக்கில் புலிப் பூச்சாண்டியைக் காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்

Previous articleகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்!
Next articleபாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம்!