நடிகை சமீரா ரெட்டியின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

நடிகை சமீரா ரெட்டியின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ‘ தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருந்தன. இது நான்கு நாட்களுக்கு நீடித்தது. இது அசாதாரணமாக தோன்றியதால் பரிசோதனை செய்து பார்த்தோம்.

ஹான்ஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. பிறகு நைராவுக்கும், அறிகுறிகள் தோன்றின. அவளுக்குக் காய்ச்சல், வயிற்று வலி இருந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை குழந்தைகளையும் பாதிப்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleமே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு!
Next articleமுல்லைத்தீவில் யாசகம் பெற்று வந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!