யாழ் பருத்துறை பகுதியில் இன்று நடந்த கொலையின் அதிரும் பின்னணி இதுதானாம்!

யாழ்.பருத்துறை – அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

உறவினர்களுக்கிடையில் பண கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்கனவே தர்க்கம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் இரு தரப்பிற்கிடையிலும் முறுகல் நிலை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்றும் இரு தரப்பினருக்குமிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையிலேயே சரமாரியான வாள்வெட்டு மோதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

மேலும் சம்பவத்தில் மு.கௌசிகள்(வயது31) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக கூறியுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை நடத்திவரும் நிலையில் மறுபக்கம் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன்,

குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Previous articleகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்!
Next articleதமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம்!