தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரைப் போல மாற வேண்டும்.
ஆனால் அவர் அவ்வகையில் இன்னும் மாறவில்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே இன்றைய பிரச்சினை என்றும் அவர்கள் கூறுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.