குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் கோழிக்குஞ்சு கழிவுகளை வீசி சென்ற விசமிகள்!

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்றுள்ளமையால் சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பள்ளத்தில் விசமிகள் சிலர் உயிரிழந்த நிலையில் காணப்படும் நூற்றுக்கணக்கான கோழிக்குஞ்சுகளை இன்று மாலை எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதுடன், சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு அருகில் சிறுவர் பூங்கா மற்றும் ஆலயம் அமைந்திருப்பதனால் அதிகமான பொதுமக்கள் சென்றுவரும் இடமாக அது காணப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வாறான நாசகார செயலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Previous articleவயோதிபர் ஒருவரை வீட்டுக்குள் வரவிடாமல் மூர்க்கத்தனமாக தாக்கும் மகள்!
Next articleகொவிட் தொடர்பில் அவசர எச்சரிக்கை!