ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார் .

மஹேல ஜெயவர்தன ( Mahela Jayawardene) தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் (SHANTHA BANDARA) கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அமைச்சர் குறித்த விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

Previous articleபிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெறும் பாரிய மோசடியை வெளிக்கொணர்ந்த பழைய மாணவர் ஒருவர் – காணொளி
Next articleஇலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!