உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய கடும்போக்காளர்களால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இறந்தவர்களிற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.