சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்குவதாக கூறி,14 வயது சிறுமியை கர்ப்பமாகிய பிரபல டிக்டாக்கர்!

சமூக வலைத்தளங்களில் இடம்பெறுகின்ற சீர்கேடுகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

விலையற்ற லைக்குகளை குவிப்பதற்காகஇ வயது வரம்பின்றி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதோடுஇ அதிகளவான குற்றங்களும் பதிவாக்கிக் கொண்டுள்ளன.

தற்போதுஇ பிரபல டிக்டாக்கர் ஃபன்-பக்கெட் பார்கவ் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவர் மேல் திஷா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிக்டாக்கில் வேடிக்கையான விடீயோக்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் பார்கவ்.

இவர் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கோஹவாலாசாவைச் சேர்ந்தவர்.

பார்கவின் டிக்டாக் வீடியோக்களைப் பார்த்து கவரப்பட்ட, சிங்ககிரியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் ஆன்லைனில் பேசி வந்துள்ளார் பார்கவ்.

அந்த சிறுமியும் பார்கவின் டிக்டாக் வீடியோக்களைப் பார்த்து அவருடன் பழகி பேசி வந்துள்ளார்.

எனினும்இ பார்கவ் அந்த சிறுமியை சோசியல் மீடியாக்களில் பிரபலம் ஆக்குவதாகக் சொல்லி ஏமாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பார்கவ் சிறுமியிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகவே அவர் மறுத்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமி உடை மாற்றும் விடீயோக்களை காட்டி மிரட்டி தன் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திஇ தற்போது அச் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த சிறுமியை பார்கவ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாகப்பட்டினம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக காணப்படுகிறார்.
கடந்த மாதம் 16 ஆம் திகதிஇ சிறுமியின் பெற்றோர்கள் பார்கவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleகொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது!
Next articleஇலங்கையில் மீட்கப்பட்ட அரியவகை ஆந்தை உயிரினம்!