தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சன்னி லியோன்!

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன், 2012 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்துள்ளார்.

2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன். 2018-ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 2017-ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.

இந்நிலையில் புதிய தமிழ்ப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன். சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவனின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப் படம் பற்றி இயக்குநர் யுவன் பேட்டியளித்ததாவது:

வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள திகில் நகைச்சுவைப் படம் இது. மையக் கதாபாத்திரம் கிளியோபாட்ரா போல வலுவானது. நம்முடைய கதாநாயகிகள் நடித்தால் வழக்கமானதாக இருக்கும். அதனால் தான் சன்னி லியோனை நடிக்க வைக்கிறோம். கதை சொல்லும்போதே நகைச்சுவைப் பகுதிகளுக்கு நன்குச் சிரித்தார். கதை அவருக்கு மிகவும் பிடித்தது. தற்போது தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார் என்றார். இந்தப் படத்தில் சதீஷ், ராஜேந்திரன், ரமேஷ் திலக் போன்றோர் நடிக்கவுள்ளார்கள்.

Previous articleபெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்!
Next articleமீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிரடி தகவல்