டெல்லியில் ரசிகர்கள் இன்றி மே 11-ந் திகதி முதல் 16-ந் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கொரோனா அச்சம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குரிய தகுதிச் சுற்றாகவும் குறித்த போட்டி அமைந்திருந்ததால் ஒலிம்பிக், உலக சாம்பியன் உட்பட உலகம் முழுவதும் 228 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்தனர் .
ஆனால் , இந்தியாவின் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன், ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பேட்மிண்டன் சங்க நிர்வாகிகள், டெல்லி அரசு அதிகாரிகளுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதற்கமைய குறித்த போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த தகவலை இ்ந்திய பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் அஜய் சிங்ஹானியா தெரிவித்துள்ளார் .