பட்டத்தை துறந்த இலங்கையின் திருமதி உலக அழகுராணி!

2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகுராணியாக அயர்லாந்து நாட்டு திருமதி அழகி கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார்.

உலக திருமதி அழகுராணி பட்டத்தையும் மகுடத்தையும் தாமாக முன்வந்து ஒப்படைத்த கரோலின் ஜூரியின் முடிவால் இரண்டாவது இடத்தை வென்ற அயர்லாந்து நாட்டு திருமண அழகு ராணிக்கு இந்த மகுடம் சொந்தமாகி உள்ளது.

உலக திருமண அழகு ராணியை தெரிவு செய்யும் அமைப்புக் குழு இதை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகியாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகுராணியை தெரிவு செய்யும் போட்டியில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இதில் கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இந்த நிலையில் கரோலின் ஜூரி தமது மகுடத்தை தாமாக தியாகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா எதிரொலி! இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிற்போடப்பட்டுள்ளது!
Next articleகிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களுடன் மூவர் கைது!