பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கொரோனா!

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,39,920 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,01,597 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்குகிறது. பிரான்சில் தற்போது 10.56 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Previous articleகிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களுடன் மூவர் கைது!
Next articleஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை!