ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தல் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான முறையில் செயற்பட ஜனாதிபதி உதவியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள் மேலும் தனித்தனியான விசாரணைகளை முடித்தவுடன் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக தேசத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் அப்பாவி பொதுமக்கள் அதற்கு விலை போயுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் முன்னாள் அரசாங்கத்தின் சில குழுக்கள் தவறான தகவல்களுடன் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு ஒத்த சம்பவங்கள் மீண்டும் நாட்டில் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை!
Next articleதடுப்பூசியை செலுத்திக்கொண்ட 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு,மூவர் உயிரிழப்பு!