தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு,மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Previous articleஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
Next articleநம்பிச்சென்ற தமிழ் மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலன்!