சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் விமானநிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் தயாரித்த கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புத்தளம் கல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரியவந்துள்ளது.

டுபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமான சேவையின் EK-649 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக குறித்த யுவதி விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

அவரது கடவுச்சீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகள்ள அந்த ஆவணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதில் வேறு ஒருவரின் கடவுச்சீட்டில் இந்த பெண்ணின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous articleவடமராட்சி கிழக்கில் துப்பாக்கி மற்றும் பன்றி இறைச்சியுடன் 3 பேர் கைது!
Next articleபுதுமணப்பெண்ணை அடித்து கொன்று விட்டு தப்பியோடிய குடும்பம்!