வவுனியாவில் உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா அரச மானியம்!

வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களில் உற்பத்தி தொழில் முயற்சியில் ஈடுபடவுள்ள முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா மானியமாக வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தி தொழில் முயற்சியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வவுனியா பிரதேச செயலகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இயந்திர மற்றும் கருவிகள் கொள்வனவுகளுக்கு ஆகக்கூடிய தொகையான ஒரு லட்சம் வரையில் அரசமானியம் வழங்கப்படவுள்ளது.

எனவே வவுனியா மாவட்ட முயற்சியாளர்கள் இவ் வாய்பினை பயன்படுத்திகொள்வதற்கும் மேலதிக விபரங்களுக்கும் வவுனியா பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபுதுமணப்பெண்ணை அடித்து கொன்று விட்டு தப்பியோடிய குடும்பம்!
Next articleவவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்ட கோரி சுவரொட்டிகள்!