வவுனியா நகரின் பல பகுதியில் நீதியை நிலைநாட்ட கோரி சுவரொட்டிகள்!

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லி.ன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நீதியினை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் இன்று (21.04.2021) அதிகாலை ஒட்டப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லு.க்.கு 02 வருடங்கள் சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை நிலைநாட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகளை இவ்வாறு வவுனியா நகர், குருமன்காடு, நூலக வீதி, நகரசபை வீதி, வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா அரச மானியம்!
Next articleசற்றுமுன் வவுனியாவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!