வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 13 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேரக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ‘
அவர்களுடன் தொடர்புடைய மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கு நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவர்களில் 13 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.