பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 69,381 பேருக்கு கொரோனா – தொற்று எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சத்தை தாண்டியது

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 69,381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,043,076 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,321 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 378,003 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து, உலகளவில் அதிகபட்ச சராசரி தினசரி இறப்பு எண்ணிக்கையை இது தெரிவித்துள்ளது.

மேலும் பெப்ரவரியில் தொடங்கிய கொரோனா தொற்றுநோய்களின் புதிய அலையால் பிரேசில் மாநிலங்களும் நகரங்களும் முடக்கல் நிலையை மறுபரிசீலனை செய்து இரவுநேர ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளன.

Previous articleசற்றுமுன் வவுனியாவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32 பேர் பலி!