ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்பவர்கள் அதற்கான பதில்களை வழங்குவார்கள் என கூறினார்.

இதேவேளை சம்பந்தப்பட்ட விசாரணைகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் கூட முழுமையாக திருப்தி அடையவில்லை என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் மே தின பேரணிகளை நடத்தாது, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Previous articleநடுரோட்டில் வைத்து முகம், கழுத்து, மார்பு என பல இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான கனடா யுவதி!
Next articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 155 பேர் அடையாளம்!