இலங்கையில் நபர் ஒருவர் வாங்கிய டின் மீனில் உள்ளே மீன் பிடிக்க உபயோகப்படுத்தப்படும் இரும்பு தூண்டில் கொக்கியொன்று இருந்துள்ளது.
அதை அறிந்த நபர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்தபோது இவை சாதாரண விஷயங்கள் என்று கூறுகிறார்கள். மேலும் வழக்குத் தொடர உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று துச்சலமாக பதில் கூறுகின்றார்கள்.
சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை மூகநூலில் பதிவிட்டுள்ளார். மக்கள் எதை கொடுத்தாலும் வாங்குவார்கள் என இவர்களுக்கு தெரியும் இந்த செயலை வன்மையாக கண்டிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.