யாழ் மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம்!

யாழ்.கோப்பாய் – மருதனார்மடம் வீதியில் மோட்டார் சைக்கிளை உழவு இயந்திரம் மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியால் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியதில் வீதியால் வந்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்திவந்த படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயாருக்கு ஏற்பட்ட நிலை!
Next articleவவுனியா திருநாவல்குளம் பகுதியில் புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்கில் மோதி விபத்தானது!