வவுனியா திருநாவல்குளம் பகுதியில் புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்கில் மோதி விபத்தானது!

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்கில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெறும் நிலை காணப்பட்ட போதிலும் அப்பகுதியில் உள்ள முற்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் குறித்த புகையிரதக்கடவையினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட 40 வயதுடைய நிசாகரன் மீது புகையிரதம் மோதியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

Previous articleயாழ் மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம்!
Next articleகொரோனா தொற்று பரவும் விகிதத்தில் உலக நாடுகளை முந்திய இந்தியா!