இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா நகரில் உள்ள 29 வயதான துணை போலீஸ் டிஎஸ்பி ஷில்பா சாஹு, தற்போதைய சூழ்நிலையில் கர்ப்பவதியாக இருந்தாலும் தன்னால் வீட்டில் இருக்க முடியாது என்று தெரிவிக்கின்றார் . ஏனெனில் தான் வெளியே இருந்தால் தான், மக்கள் வீட்டிலேயே இருப்பார்கள் என்று கூறுகிறார்.
ஏப்ரல் 18’ஆம் திகதி இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், டிஎஸ்பி ஷில்பா வெப்பமான காலநிலையிலும் ஊரடங்கை செயற்படுத்த சாலையில் கடமையில் ஈடுபட்டுள்ளார் .
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ,“கொரோனா தொற்றுநோய் மாநிலம் முழுவதும் மிகவும் மோசமாக இருக்கும்போது, மக்கள் தங்களையும் சமூகத்தையும் நோக்கிய தங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்ள கடமைப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். மேலும், பொதுமக்களுக்கு இதன் மூலம் அவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களின் பாதுகாப்புக்காக மட்டுமே நாங்கள் தெருக்களில் இருக்கிறோம் என்ற ஒரு வலுவான செய்தி கிடைக்கிறது. அனைவரின் பாதுகாப்பிற்காக நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் மக்களுக்கு சொல்லி வருகிறேன் “என்று கர்ப்பவதியான டிஎஸ்பி ஷில்பா தெரிவித்துள்ளார் .