வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை அடித்து தூக்கி எறிந்த கடுகதி புகையிரம்!

​வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி புகையிரம் இன்றுகாலை (22.04.2021)மோதியதில் அனைத்து மாடுகளும் பலியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாகவும், இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில், அவை வீதியோரங்கள் மற்றும் புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.​

Previous articleஇன்றைய ராசிபலன் – 22.04.2021
Next articleசற்றுமுன் யாழில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு!