யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு – துணைவேந்தருக்கு இன்று மாரடைப்பு

யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா மரடைப்பின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் மீள அமைக்கப்பட்டு நாளை திறந்துவைக்கப்படவுள்ளது.

துணைவேந்தர் சிறீ சற்குராஜாவே நாளை நினைவுதுாபியை திறந்துவைப்பார். என கூறப்பட்டதுடன் புதிதாக கட்டப்பட்ட நினைவு துாபிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு துாபி என பெயரிடுவதா?

சமாதான துாபி என பெயரிடுவதா? என சர்ச்சைகள் எழுந்திருந்ததாக கூறப்படும் நிலையில் துணைவேந்தர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleகொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை!
Next articleயாழில் பொலிசார் துரத்த துரத்த ஆசிரியையை மோதிய டிப்பர்!