பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கும் திட்டம் 2 வாரங்களிற்கு ஒத்திவைப்பு!

பல்கலைகழங்கள் மீள ஆரம்பிக்கும் திட்டம் 2 வாரங்களிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 27 ஆம் திகதி அனைத்து பல்கலைகழகங்களும் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜி.எல். பீரிஸ் , நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அனைத்து துணைவேந்தர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Previous articleயாழில் பொலிசார் துரத்த துரத்த ஆசிரியையை மோதிய டிப்பர்!
Next articleகுளவிக்கொட்டால் 20 தொழிலாளர்கள் பாதிப்பு!