நாட்டில் நேற்று மட்டும் 578 பேருக்கு தொற்று!

இரண்டு மாதங்களின் பின்னர் இலங்கையில் நேற்று (21) கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்தது. நேற்று 578 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,050 ஆக உயர்ந்தது.

நாட்டில் கடைசியாக பெப்ரவரி 22ஆம் திகதி அன்று 518 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 516 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அண“மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 62 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி 3,752 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 121 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,688 ஆக உயர்ந்தது. 483 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

Previous articleகுளவிக்கொட்டால் 20 தொழிலாளர்கள் பாதிப்பு!
Next articleகனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகரிக்கும் கொரோனா தொற்று!