கிளிநொச்சியில் வீடுபுகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு!

கிளிநொச்சி தருமபுரம் புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்தி தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் ஓன்று மீட்பு!
Next articleதிடீரென உச்சமெடுக்கும் கொரோனா – தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை