திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறக்கப்படுமாம்!

யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

பல்கலைக் கழக துணை வேந்தர் சிறிசற்குணராயா மாரடைப்பு காரணாம யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகதேகியாகவுள்ள துணை வேந்தருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இரு இடங்களில் இரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையிலேயே துணை வேந்தர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்படும். என மாணவர் ஒன்றியம் தொிவித்திருக்கின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று!
Next articleஇரவோடிரவாக இடிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு – படங்கள் இணைப்பு