யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான தகவல்!

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரின் உடல் நிலை குறித்த மருத்துவ தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, நேற்று ஏற்பட்ட இருதய அடைப்புக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட இந்த திடீர் மாரடைப்புத் தொடர்பில் இருதய குருதிக் குழாய் மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுதொடர்பான பரிசோதனையின் பின்பே இருதய சத்திரச்சிகிச்சை அல்லது உறைகுழாய் (Stent) வைப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டை கவனிக்காமல் அவர் விட்டதனால் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்படுவதாகத் தெரிவித்த பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதன்போதே அவருக்கு இருதய அடைப்பு ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவின் மருத்துவ சோதனைகள் மற்றும் உடன் சிகிச்சைகளை இருதய சத்திரசிகிச்சை வல்லுநர்கள் லக்ஸ்மன், குருபரன் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

Previous articleயாழில் வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!
Next articleநாட்டில் 24 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு பொலிஸில் இணைய வாய்ப்பு!