கொரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் தீயில் கருகி பலி!

மகாராஷ்டிரா மாநிலம் – விரார் பகுதியில் இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்தத் தீவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை புறநகர்ப் பகுதியான விரார் பகுதியில் உள்ள விஜய் வல்லப் கொரோனா சிகிச்சை மருத்துவமனையிலேயே இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீவிபத்தை அடுத்து சாதாரண நோயாளிகள் தப்பியோடிவிட்டபோதும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பெரும்பாலானோர் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தீயில் கருகி இறந்தனர். தீவிபத்தை அடுத்து தீயணைப்புப் பிரிவினர் வருவதற்குள் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

பின்னர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய கொரோனா தொற்று நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒக்சிஜன் வாயு கசிந்த சம்பவத்தில் 24 பேர் உயரிழந்தனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு மருத்துவமனை தீவிபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்த மருத்துவமனைத் தீவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீவிபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் உதவித் தொகை அளிக்கப்படும் என அவா் அறிவித்துள்ளார்.

Previous articleசற்றுமுன் வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா!
Next articleஉயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெயரில் போலி ஆவணம் தயாரித்தவருக்கு நேர்ந்த கெதி!