உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெயரில் போலி ஆவணம் தயாரித்தவருக்கு நேர்ந்த கெதி!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, மனிதக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

42 வயதான சந்தேகநபர் வவுனியாவில் வைத்து பங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் செய்தித் தொடர்பாளர், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) அஜித் ரோஹானா கூறுகையில், 42 வயதான நபர் நேற்று வவுனியாவில் கைது செய்யப்பட்டார்.

மனித கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்ட பின்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (டிஐடி) அவரை கைது செய்தது.

உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பினரின் பெயரில் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்களை இந்த நபர் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Previous articleகொரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் தீயில் கருகி பலி!
Next articleகொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்வு – மணமக்கள் இருவருக்கும் கொரோனா