மீண்டும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளிதுமளி!

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அனுரகுமார திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவிற்கிடையில் பரபரப்பான வார்த்தை மோதல் வெடித்தது.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிப்பது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலை தெரிவித்ததை அடுத்து இந்த வார்த்தை மோதல் வெடித்தது.

மேலும் ஆளுந்தரப்பில் உட்கார்ந்திருந்த இந்திகா அனுருத்த முன் வரிசையை நோக்கி நடந்து செல்வதும், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவை அச்சுறுத்தும் விதத்தில் வாக்குவாதம் செய்வதும் காணொளியில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அவரை தனது இருக்கைக்கு திரும்புமாறு சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன பல முறை கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

Previous articleநாட்டில் திடீரென கொரோன தோற்று எண்ணிக்கை – மீண்டும் நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டுமாயென வெளியாகிய அறிவித்தல்
Next articleடின் மீனில் இரும்புத் தூண்டில்-இவை சாதாரண விஷயம் என்கிறது நிறுவனம்!