இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற டின் மீனில் தொடர்ந்தும் கழிவுப் பொருட்கள் கண்டறியப்படுகின்றமை மக்களை வெறுப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், நபர் ஒருவர் வாங்கிய டின் மீனில் உள்ளே மீன் பிடிக்க உபயோகப்படுத்தப்படும் இரும்பு தூண்டில் கொக்கியொன்று காணப்பட்டுள்ளது.
இதை அறிந்த நபர், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்தபோது இவை சாதாரண விஷயங்கள் என்று கூறியுள்ளார்கள்.
மேலும் வழக்குத் தொடர உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று ஆணவத்துடன் பதில் கூறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.