குற்றப்பிரிவு பொலிஸ் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 51 ஆக்சிஜன் சிலிண்டர்கள்!

இந்தியாவின் கான்பூர் குற்றப்பிரிவு பொலிஸ் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 51 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பில் கான்பூர் நகரின் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள எரிவாயு முகமை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதில் ஏஜென்சி உரிமையாளர் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என கான்பூர் குற்றப்பிரிவு டி.சி.பி சல்மான் தாஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார் .

குறித்த அதிரடி சோதனையில் , குடோனில் இருந்து கிட்டத்தட்ட 51 பெரிய மற்றும் சிறிய ஆக்சிஜன் எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் பறிமுதல் செய்து, ஏஜென்சி உரிமையாளர் ஜஸ்வந்த் சிங்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன .

Previous articleடின் மீனில் இரும்புத் தூண்டில்-இவை சாதாரண விஷயம் என்கிறது நிறுவனம்!
Next articleசெம்பருத்தி சீரியல் நடிகையை வீடியோ எடுத்து மிரட்டிய உதவி இயக்குணர் – அடுத்த சித்ரா நான்தான் என கதறும் நடிகை