பல வருடங்களாகவே சினிமா நடிகைகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் இவ்வாறான் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
மேலும் சமீபகாலமாக சினிமாவைவிட சீரியல் நடிகைகள் தான் இந்த மாதிரி புகார்களில் அதிகமாக சிக்கி வருகின்றனர். வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்ற பலரின் ஆசை பேச்சை நம்பி மோசம் போய் விடுகின்றனர் இவர்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் முன்னணியில் சென்று கொண்டிருக்கும் சீரியல்தான் செம்பருத்தி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி சீரியல் மூலம் தான் ஜீ தமிழ் என்ற சேனல் இருப்பதே பலருக்கும் தெரியும் என்று தான் கூறவேண்டும்.
செம்பருத்தி சீரியல் நடித்துள்ள உமா என்ற நடிகையை அதே சீரியலை சேர்ந்த சில நபர்கள் ஆசை வார்த்தை காட்டி அவர்களுடைய ஆசைக்கு அவரை இணங்க வைத்துள்ளனர். மேலும் அவரை அரை நிர்வாணப்படுத்தி ஒரு காருக்குள் வைத்து கொண்டு சென்னை சிற்றியை சுற்றி காருக்குள்ளேயே மானபங்கப்படுத்தியுள்ளனர்.
அந்த நடிகையை மட்டுமில்லாமல் அந்த நடிகையின் உடன்பிறந்த சகோதரியையும் மோசமான புகைப்படங்களை எடுத்து மிரட்டி தங்களுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இது சம்பந்தமாக அந்த நடிகை நேரடியாக புகார் கொடுத்தும் எந்த பிரயோசனமும் இல்லை என பத்திரிகையாளர்களுக்கு தகவல் குடுத்துள்ளார்.
மேலும் அந்த நடிகை தானும் அடுத்த சித்ராவாக மாறிவிடக் கூடாதென்று அவர் கூறியதன் மூலம் மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சித்ராவையும் இப்படித்தான் கொடுமைப்படுத்தினார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இதை பார்த்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இந்த மாதிரி கொடுமைப்படுத்துபவர்களை விட, அவர்கள் இவ்வாறு தப்பாக நடந்து கொள்ளும் அளவுக்கு பெண்கள் நடந்து கொள்வதைதான் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.